பைக் ஆவணத்தை கேட்ட போலீஸ்…பைக்_கையே கொளுத்திய உரிமையாளர்…!!

போலீஸ் ஆவணங்களை கேட்டதால் பைக்கை பால்காரர் தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியை அடுத்த குர்கானின் டிஎஸ்டி கல்லூரி அருகே புதிய ரெயில்வே சாலையில் போலீசார் இளைஞர் ஒருவரை வழிமறித்து விசாரணையை மேற்கொண்டனர். அப்போது போலீசார் அவரிடம் ஆவணங்களை கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த இளைஞர் மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்துவிட்டு செல்கிறார். இதனை பார்த்த அங்கு நின்றவர்கள் கத்திக்கொண்டு ஓடுகிற காட்சிகள் வெளியாகியுள்ளது. வீடியோ அப்பகுதியில் நடந்து சென்றவரால் எடுக்கப்பட்டுள்ளது. போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர் வண்டியில் இருந்து பால் கேனை எடுத்துச் செல்கிறார்.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடப்பதாகவும், முழுவதும் விசாரிக்கப்பட்டதும் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பைக்கிற்கு இளைஞர் தீ வைத்ததும் தீயணைப்பு படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். பைக்கின் பாகங்கள் ஆய்வு செய்யப்படுகிறது. யாருடையது என்பதை ஆய்வு செய்து வருகிறோம் என போலீஸ் தெரிவித்துள்ளது. பைக்கை தீ வைத்து எரித்த பால்காரர் அங்கிருந்து சென்றுவிட்டார். அவரைவிட்டது ஏன்? என்ற கேள்விக்கு பைக்கில் எரிந்த தீயை அணைப்பதில் கவனம் செலுத்தினோம் என போலீஸ் தரப்பில் பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

dinasuvadu.com