‘இந்திய பேட்ஸ்மேன்களை பிடிக்கவில்லை என்றால், இந்தியாவில் இருக்கவேண்டாம்’ என விராட் கோலி ரசிகருக்கு ஆவேசமாக பதிலளித்துள்ளார்.
கிரிக்கெட் உலகில் பேட்டிங்கில் யாரும் அசைக்கமுடியாத நட்சத்திரமாக வலம்வரும் விராட் கோலியை ஒவ்வொரு தருணத்திலும் ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள், ஆதரவை தெரிவிக்கிறார்கள். சமீபத்தில் விராட் கோலி 10 ஆயிரம் ரன்களை குவித்த போதும் அவரை ரசிகர்கள் கொண்டாடினர். அவர் ரன் சேர்க்காத போதும் அவர்களுடைய அன்பு குறைவது கிடையாது. விராட் கோலியை ஊக்கப்படுத்தும் விதமாக கருத்துக்களை வெளியிடுவார்கள். அவருக்கென்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. இப்போது ரசிகர் ஒருவரின் டுவிட்டிற்கு கோபமாக விராட் கோலி பதிலளித்தது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. விராட் கோலி வெளியிட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
விராட் கோலியை கோபமடைய செய்த கேள்வியென்ன? ரசிகர் ஒருவர், “விராட் கோலியின் மீது அளவுக்கு அதிகமான நம்பிக்கையும், நல்ல எண்ணமும் ரசிகர்கள் வைத்திருக்கிறார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் அவரிடம் சிறப்பான பேட்டிங் திறமை இருப்பதாக தெரியவில்லை இந்திய பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்வதை ரசிப்பதை காட்டிலும், இங்கிலாந்து, ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்வதை ரசித்துப் பார்ப்பேன்,” என்று கூறியுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள விராட் கோலி கோபமடைந்துள்ளார்.
‘இந்திய பேட்ஸ்மேன்களை பிடிக்கவில்லை என்றால், இந்தியாவில் இருக்கவேண்டாம்’ என விராட் கோலி ரசிகருக்கு ஆவேசமாக பதிலளித்துள்ளார்.
 “இக்கருத்தை தெரிவிக்கும் ரசிகர் இந்தியாவில் வசிக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. இந்தியாவை விட்டு வெளியேறி வேறு எங்காவது சென்று வசிக்கலாம், வாழலாம். பிற நாட்டின் மீது நேசம் மற்றும் விருப்பம் கொண்டிருக்கும் போது இந்தியாவில் அந்த ரசிகர் வாழ வேண்டும். நீங்கள் என்னைப் பிடிக்கவில்லை என்பதற்காக கவலைப்படவில்லை. அதற்காக இப்படியெல்லாம் பேசவில்லை. மற்ற நாடுகளை விரும்பிக்கொண்டு, இந்தியாவில் வசிக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. உங்களுடைய முன்னுரிமை என்னவென்று முடிவு செய்யுங்கள்,” என்று கோபமாக பதிலளித்துள்ளார். விராட் கோலி பேசும் இந்த விடியோ சமூக ஊடகங்களில் பெரும் வைரலாகி வருகிறது.
விராட் கோலிக்கு ஆதரவு தெரிவித்து வீடியோக்கள் பகிரப்பட்டு வருகிறது. அவருடைய பேச்சை பாராட்டி பதிவுகள் வெளியிடப்பட்டு வருகிறது. மறுபுறம் விமர்சனங்களும் பகிரப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here