தொடர்ச்சியாக பெட்ரோல், டீசல் விலை குறைந்து வருவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சமீப காலமாக பெட்ரோல், டீசல் விலை குறைந்து வருகிறது. இதன்படி இன்றும் பெட்ரோல், டீசல் விலை கணிசமாக குறைந்துள்ளது.

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றை விலையிலிருந்து 42 காசுகள் குறைந்து 73 ரூபாய் 57 காசுகளுக்கும் இதேபோல் ஒரு லிட்டர் டீசலின் விலை 44 காசுகள் குறைந்து 69 ரூபாய் 19 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.