புதிதாக களமிறங்கியுள்ள மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்யுவி! அதன் சிறப்பம்சங்கள்!!

மஹிந்திரா நிறுவனத்தின் விலை அதிகமான பிரீமியம் கார் மாடலான அல்டுராஸ் ஜி4 எஸ்யுவியில் வரும் 24ஆம் தேதி இம்மாடல் விற்பனைக்கு வரவுள்ளது. இதன் சிறப்பம்சங்கள் மற்றும் சில படங்களை இங்கே காணலாம்.

எப்போதும் போல மஹிந்திரா நிறுவனத்தின் கார்களுக்குரிய முத்தாய்ப்பான க்ரில் அமைப்பு, லோகோ இடம்பெற்றிருக்கிறது. வலிமையான பானட் மற்றும் பம்பர் அமைப்பு போன்றவை இடம்பெற்றுள்ளன. இந்த மாடல், 200 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டது. ஹெட்லைட்டையும், டெயில் லைட்டையும் இணைக்கும் ஷோல்டர் லைன் எஸ்யூவிக்கு உரிய மிரட்டலை கொடுக்கிறது.

வெளிப்புறத்தை போலவே, உட்புறத்திலும் மிக நேர்த்தியாக டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. ஃபிட் அண்ட் ஃபினிஷ் தரமும் மிகச் சிறப்பு.

இதன் விலை 23 லட்சமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலை இதன் போட்டி மாடலாக உள்ள ஃபார்ச்சூனர், ஃபோர்டு, டொயோட்டா ஆஙிய மாடலை விட குறைந்த விலையில் இருப்பதால் மற்ற வாகனங்களுக்கு போட்டியாக மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்யுவி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

DINASUVADU