புற்றுநோய் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நெல் ஜெயராமன் காலமானார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த ஆதிராம்மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன். பாரம்பரிய நெல்வகைகள காப்பாற்றுவதற்காக தேசிய, மாநில விருதுகளை பெற்றுள்ள இவர், இதுவரை 169 அரிய வகை நெல் வகைகளை மீட்டெடுத்துள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவர், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி நெல் ஜெயராமன் காலமானார்.

DINASUVADU.COM