பாடகியாக மாறும் தமிழ் நடிகை..!!

நடிகை ஸ்ருதிஹாசன் இசைக்குழு நடத்தி வருகிறார். நடிப்பிலிருந்து ஒதுங்கியிருக்கும் அவர் இசையில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் லண்டனில் நடந்த இசை நிகழ்ச்சியில் மேடையில் பாப் இசை பாடல் பாடி பரபரப்பை ஏற்படுத்தினார். சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் இதுபோன்ற இசை நிகழ்ச்சிகள் நடத்தி பாப் பாடகியாக புகழ் பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் அவர் தற்போது தீவிரமாக உள்ளார்.

அந்த வரிசையில் இணைந்திருக்கிறார் நடிகை ஆண்ட்ரியா. திரைப்படங்களில் நடிப்பதுடன் இசை அமைத்து பாடல்கள் பாடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார் ஆண்ட்ரியா. சமீபத்தில் அவரே எழுதி பாடிய ‘ஹானஸ்ட்லி’ என்ற ஆங்கில பாடலை இணைய தளத்தில் வெளியிட்டார். அது அவருக்கு வரவேற்பை பெற்றுத்தந்திருக்கிறது. இதற்கிடையில் வடசென்னை, கா உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார்.

DINASUVADU 

Leave a Comment