பாஜக MLA நாக்கை கொண்டுவந்தால் ரூ.5 லட்சம் பரிசு..!!காங்கிரஸ் நிர்வாகி பகீரங்க அறிவிப்பு ..!!

பெண்களை தொண்டர்களுக்காக கடத்துவேன் என்று பகீரங்கமாக பேசிய பாஜக எம்எல்ஏ ராம் கதமின் நாக்கை அறுத்துக் கொண்டு தன்னிடம் வருபவர்களுக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான சுபோத் சாவோஜி தெரிவித்துள்ளார்.

ஜென்மாஷ்டமி அன்று மும்பையில் உரியடித்தல் போட்டி நடத்தப்பட்டது.இதில் கலந்து கொண்ட எம்எல்ஏ ராம்கதம் தொண்டர்கள் பேசுகையில்,” நீங்கள் எந்தப் பெண்ணை காதலித்தாலும் என்னிடம் வந்து சொல்லுங்கள் அந்த பெண் யாராக இருந்தாலும் அவரைக் கடத்திவந்து உங்களிடம் தருகிறேன். என்னுடைய செல்போன் எண்ணைக் குறித்துக்கொள்ளுங்கள்” என்று தெரிவித்தார்.

Image result for SUBODH SAOJI CONGRESS

இதனிடையே  மகளிர் அமைப்புகளும் ராம் கதமை கண்டித்திருந்தன. பெண்கள் குறித்து தரக்குறைவாகப் பேசிய ராம் கதமையும் நெட்டிசன்களும் விளாசி எடுத்தனர்.

எதிர்ப்பு கிளம்பிய நிலையில் தன்னுடைய பேச்சு குறித்து ட்விட்டரில் நேற்றுமுன்தினம் கருத்து ஒன்றைபதிவிட்டிருந்தார். அதில், ‘‘நான் யாருடைய மனதையும் புண்படுத்தும் எண்ணத்துடன் கருத்துக்களை தெரிவிக்கவில்லை. அவ்வாறு நான் கருத்து தெரிவித்திருந்தால், அதற்கு மன்னிப்புகோருகிறேன். என்னுடைய கருத்துக்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்படுவதற்கு எதிர்க்கட்சிகள்தான் காரணம்’’ எனத் தெரிவித்திருந்தார்.

Image result for SUBODH SAOJI CONGRESS

இதற்கு பதிலடியாக பதில் அளித்த  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான சுபோத் சாவோஜி  இது குறித்து  அவர் கூறுகையில், ” பொறுப்பான பதவியில், மக்கள் பிரதிநிதியாக இருக்கும் பாஜக எம்எல்ஏ ராம் கதம் தனது தகுதிக்கு குறைவான முறையில் பெண்களை அவமானப்படுத்தும் வகையில் பேசியுள்ளார். அவரின் பேச்சால் இப்போது அவர்தான் அவமானப்பட்டுள்ளார்.

என்னுடைய வேண்டுகோள் இப்போது என்னவென்றால், மகாராஷ்டிராவில் மண்ணில் பிறந்த யாராவது ஒருவர், பாஜக எம்எல்ஏ ராம் கதமின் நாக்கை அறுத்துக் கொண்டு வாருங்கள். அவ்வாறு கொண்டு வருவோருக்கு ரூ.5 லட்சம் பரிசாக நான் அளிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் தலைவரின் இந்த அறிவிப்பு மேலும் மாகராஷ்ரா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

DINASUVADU

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here