பள்ளத்தில் விழுந்து தவித்து கிடந்த நாயை மீட்ட 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்….!!

633

பள்ளத்தில் விழுந்து தவித்து கிடந்த நாயை மீட்ட 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பாராட்டுக்கள் குவிகிறது.

உயிருக்கு போராடும் எத்தனையோ மனிதர்களை தினசரி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் காப்பாற்றி வருகின்றனர். திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஒரு படி மேலே போய் உயிருக்கு போராடிய நாயை காப்பாற்றி உள்ளனர். மணப்பாறையில் உள்ள விராலிமலை சாலையில், சாலையோரம் தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் இருந்து யாரோ ஒருவர் அழுவது போன்ற சத்தம் கேட்டுள்ளது. இதை அந்த வழியாக சென்ற 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் கேட்டதும், ஆம்புலன்சை நிறுத்தி விட்டு யாரேனும் பள்ளத்தில் விழுந்து விட்டார்களா என்று பார்த்த போது, நாய் ஒன்று மேலே ஏற முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது. இதையடுத்து அந்த நாயை மீட்கும் முயற்சியில் அவசர கால மருத்துவ நிபுணர் பாஸ்கர் மற்றும் ஓட்டுனர் பிரதாப் ஆகிய இருவரும் ஈடுபட்டனர். அரை மணி நேரத்திற்கும் மேலாக போராடி நாயை பத்திரமாக மீட்டனர்.