நவீன எஎஸ்பிஎஸ் பிரேக்கிங் சிஷ்டத்துடன் களமிறங்கும் புதிய பிளாட்டினா 110!!

1040

இந்திய வாகன சட்டம் அண்மையில் இனி இனி வரும் வாகனங்களுக்கு பிரேக்கிங் சிஸ்டம் நன்றாக இருக்கவேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்ட பிறகு அணைத்து மோட்டார் உற்பத்தி நிறுவனங்களும் தங்களது வாகனங்களுக்கு நவீன பிரேக்கிங் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தி வருகின்றன.

அதன்படி தற்போது பஜாஜ் நிறுவனமும் தங்களது நிறுவனத்தின் புதிய பிளாட்டினா வாகனத்திற்கு எஎஸ்பிஎஸ் என்கிற புதிய பிரேக்கிங் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த எஎஸ்பிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமானது, ஆன்டி ஸ்கிட் பிரேக்கிங் சிஸ்டம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது, ஓர் அவசரத்தில், பிரேக் பிடிக்கும் போது பிரேக் இரு சக்கரங்களுக்கும் சரியான நேரத்தில் ஒரே மாதிரியாக அழுத்தத்தை கொடுத்து வாகனத்தை நிறுத்தவும், ரோட்டில் சறுக்கி கொள்ளாமல் இருக்க இது உதவுகிறது. இதனால் வாகனத்தின் பாதுகாப்பு மேலும் உறுதிப்படுத்தப்படும் என நம்பப்படுகிறது.

மேலும், இந்த் மாடலில், முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் இன்வர்டெட் நைட்ராக்ஸ் கேஸ் சார்ஜ்டு ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளன. இரண்டு சக்கரங்களிலும் 80/100-17 அளவுடைய டயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன் விலை 49,300 எக்ஸ் ஷோரூம் விலையாக உள்ளது.

DINASUVADU