ஏலக்காய் இயற்கையிலேயே மிகவும் நறுமணம் வீச கூடிய குணமுடையது.
ஏலக்காய் பலவகைகளில் இயற்கை மருந்தாகப் பயன்படுகிறது. ஏலக்காய் விதையில் புரதச்சத்து, சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து, சோடியம், வைட்டமின்கள் ஏ, பி, சி அடங்கியுள்ளன. மேலும் இவை பித்தம் அகற்றி, நரம்புத் தளர்ச்சியை நீக்கி, வலுப்படுத்தும் தன்மையது. Image result for ஏலக்காய்
ஏலக்காய் தூள், டீ தூள் இரண்டையும் சேர்த்து டீ தயாரித்து அத்துடன் தேன் சேர்த்து, தினம் இருவேளை பருகி வர, நரம்புகள் வலுப்படும். தேனுடன், ஏலக்காய்தூள் கலந்து, சாப்பிட்டு வர, நரம்புத் தளர்ச்சி நீங்கும்.
அன்னாசிப்பழச்சாறுடன், ஏலக்காய்தூள் சேர்த்து பருகிவர, சிறுநீர் கோளாறுகள் குணமாகும். நீர்கடுப்பு நீங்கும். சிறுநீர் வெளியேறாமல் அவதிப்படுபவர்களுக்கு, சிறுநீர்  தாராளமாகப் வெளியேறும்..
Image result for ஏலக்காய்சுக்கு, ஏலக்காய், கிராம்பு இவைகளுடன் சிறிது நீர் தெளித்து மைய்ய அரைத்து, சூடாக்கி கை, கால் மூட்டுகளின் மீது பூசி வர, மூட்டுவலி குணமாகும்.  ஆரம்பநிலை வாதம் நீங்கும்.
செவ்வாழைப்பழத்துடன், சிறிது ஏலக்காய்தூள் சேர்த்துச் சாப்பிட்டால் மாதவிடாய்க் கோளாறுகள் ஒழுங்குபடும். வெல்லத்தைப் பொடித்து நீரில் கலந்து, அத்துடன், எலுமிச்சைச்சாறு, ஏலக்காய் தூள் சேர்த்து பானம் தயாரித்து பருகினால் கோடைத்தாகம் நீங்கும். உடல் குளிர்ச்சி அடையும். சோர்வு மாறி புத்துணர்ச்சி  ஏற்படும்.