30 C
Chennai
Thursday, October 21, 2021

தைவான்:அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ…. 46 பேர் பலி;54 பேர் படுகாயம்..!

தைவான் நாட்டின் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 46 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 54 பேர்  காயமடைந்துள்ளனர்.

தைவான் நாட்டின் தெற்கே காவோசியங் நகரில் 13 அடுக்குகள் கொண்ட அடுக்கு மாடிக் குடியிருப்பு ஒன்று உள்ளது.இந்த கட்டிடம் சுமார் 40 ஆண்டுகள் பழமையானது, அதன் கீழ் மட்டத்தில் கடைகள் மற்றும் மேலே குடியிருப்புகள் உள்ளன.

இந்த நிலையில்,இன்று அதிகாலை 3 மணியளவில் திடீரென 13 மாடி கட்டிடத்தின் முதல் தளத்தில் தீப்பிடித்து,அடுத்தடுத்த தளங்களுக்கும் மளமளவென பரவியுள்ளது. இதனையடுத்து,தகவல் அறிந்து  சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

எனினும்,முதற்கட்ட தகவலின்படி 32 பேரின் இறந்த உடல்கள் மீட்கப்பட்டது. மேலும்,உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவர்களில் 14 பேர் உயிரிழந்தனர்.இதனைத் தொடர்ந்து, காயமடைந்த 54 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மேலும்,தீ விபத்துக்கான காரணம் குறித்து  தைவான் போலீசார் விசாரணையில் ஈடுப்பட்டுள்ளனர்.

spot_imgspot_img

Hot Topics

Read More