தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதவர்களை மக்கள் அடித்து விரட்டுவார்கள் என நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

வருகின்ற மே மதம் பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெற இருக்கின்றது.இந்த தேர்தலை எதிர் கொள்ளும் நோக்குடன் அனைத்து அரசியல் கட்சிகளும் திட்டமிட்டு வருகின்றனர்.தேசிய கட்சிகளும் , மாநில கட்சிகளும் கூட்டணி தொடர்பாக பேச ஆரம்பித்து விட்டனர்.ஒவ்வொரு மாநிலத்திலும் தங்களின் பிரச்சாரத்தையும் தற்போதே இவர்கள் தொடக்கி விட்ட்டனர்.

இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற பாரதீய ஜனதா கட்சி கூட்டத்தில் பங்கேற்று பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பேசினார்.அப்போது பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்காரி , தேர்தலில் வெற்றி பெற்றால் இதை செய்வேன் என்று வாக்குறுதி அளித்தவர்கள் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றால் அவர்களை மக்கள் அடித்து விரட்டுவார்கள் என்று நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் நான் அளித்த வாக்குறுதிகளை 100 நிறைவேற்றி விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.