துணிவில்லாத அரசு……படத்திற்கு எதிராக அரசியல் சூழ்ச்சி…கமல் ஆவேசம்..!!!

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் AR முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகி அரசியல் வட்டாரத்தை ஒரு அடி ஓங்கி அடித்துள்ள படம் தான் சர்கார்.தீபாவளி அனறு வெளியாகி ரசிகர்களின் ஒட்டுமொத்த ஆதரவை பெற்று திரையரங்கில் வெற்றிக்கரமாக ஓடிக் கொண்டிருக்கும் சர்கார் இடையில் சர்ச்சையில் சிக்கி தற்போதும் சர்ச்சையில் சிக்கியுள்ளது .

சர்கார் இப்பொழுது ஆளும் அரசாங்கத்தால் ஏற்பட்டுள்ளது.படத்தில் அரசை விமர்சிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது என்று கொந்தளிக்கும் அரசியல் வட்டாரங்கள் விஜயின் பேனர்களை கிழித்தும் ,கட்அவுட்களை சேதப்படுத்தியும் ரகளையில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில் பரபரப்பாக நிகழ்வுகளை சந்தித்து வரும் சர்கார் அரசியலில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதா..? அல்லது விஜயின் அதிரடி அரசியல் நகர்வை கண்டு அச்சம் கொள்கிறதா அரசியல் வட்டாரம் என்று ரசிகர்கள் தங்களுக்குள் முனுமுனுக்கின்றனர்.

இந்நிலையில் படம் குறித்து நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் படத்திற்கு ஆதரவாகவும் மற்றும் படத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களுக்கு தனது வார்த்தையால் சட்டை அடி கொடுத்துள்ளார்.அவர் பதிவிட்டது என்னவென்றால் முறையாகச் சான்றிதழ் பெற்று வெளியாகியிருக்கும் சர்கார் படத்துக்கு,சட்டவிரோதமான அரசியல் சூழ்ச்சிகள் மூலம் அழுத்தம் கொடுப்பது இவ்வரசுக்கு புதிதல்ல.விமர்சனங்களை ஏற்கத்துணிவில்லாத அரசு தடம் புரளும்.அரசியல் வியாபாரிகள் கூட்டம் விரைவில் ஒழியும் நாடாளப்போகும் நல்லவர் கூட்டம் வெல்லும் என்று கூறியுள்ளார்.

DINASUVADU