குறைந்த விலையில் நிறைவான தரம் என்று சொல்லும் அளவிற்கு ஸ்மார்ட் போன்களை குறைந்த விலையில் அறிமுகப்படுத்தி மக்களிடம் நன்மதிப்பை பெற்ற நிறுவனம் சியோமி. அந்நிறுவனம் தற்போது புதிதாக எல்இடி 4A ப்ரோ டிவியை பிரத்யோகமாக வடிவமைத்துள்ளது.

சியோமியின் தனித்துவமான கண்டென்ட் டிஸ்கவரி இன்ஜினுடன் இந்த டிவி வடிவமைக்கப்பட்டுள்ளதால், 15க்கும் மேற்பட்ட சோர்ஸ்கள் மூலம், மணிக்கு 7 லட்சத்துக்கும் அதிகமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை பார்க்க முடியும். மேலும், எச்.டி.ஆர் ஆதரவு மற்றும் 8.1 நவீனப்படுத்தப்பட்ட ஆண்ட்ராய்டு இயங்குதளம் மூலம் 1080 பேனல் வீடியோ அவுட் புட்டுடன் இயங்குதிறன் கொண்டது. இதன் விலை 29,999/- என நிர்ணயம் செய்யப்பட்டு சியோமி தளத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

தரமான வைஃபை வசதி இடம்பெற்றுள்ளது ஆதலால் இன்டர்நெட் ஸ்பீடாக இருந்தால் தரமான விடியோக்களை துல்லியமாக பார்க்க முடியும். எச்.டி.ஆர் ஆதரவு மற்றும் 1080 வீடியோ வெளியீட்டுத் திறனும் வண்ணச்சாரலையும், கண்ணியமான பொலிவையும் தருகிறது. டி.டி.எச் மற்றும் எச்.டி ஒலிபெருக்கி வசதிகளுடன் டி.வி இருக்கும் அறை அழகிய ஓசைகளால் நிரம்புகிறது.புளூ டுத் ஸ்பீக்கர், சவுண்ட் பார் இல்லாமல் நல்ல ஒலிகளை கேட்க முடியும். 14 வித்தியாசமான கண்டென்களில் மணிக்கு 7 ஆயிரம் இசையை உள்வாங்கிக் கொள்ளலாம். ஹாட் ஸ்டார், ஹங்கமா, சோனி லிவ், வூட், ஈரோஸ் நவ், ஜீ5, ஜியோ சினிமா, ஹூக், எபிக் ஆன் சேவைகளை உள்ளடக்கியது.

DINASUVADU

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here