திருச்சி விமான நிலையத்தில் ரூ.26 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்…!!!

12

திருச்சி விமான நிலையத்தில் ரூ.26 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

துபாயில் இருந்து இலங்கை வழியாக திருச்சி வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது,  ஐதராபாத்தைச் சேர்ந்த கெருன்னிசா குல்முகமது என்ற பெண்ணின் உடைமைகளில் இருந்து 19 லட்சத்து 30 ஆயிரத்து 577 ரூபாய் மதிப்புள்ள 599 கிராம் எடையுள்ள தங்கச் சங்கிலி பறிமுதல் செய்யப்பட்டது.

கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானத்தில் திருச்சி வந்த விக்னேஸ்வரன் என்ற பயணியிடம் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில், 6 கோடியே 96 லட்சத்து 716 ரூபாய் மதிப்புள்ள 226 புள்ளி 5 கிராம் எடையுள்ள 4 தங்கச் சங்கிலிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அதிகாரிகள் இரண்டு பயணிகளிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.