தளபதியின் சர்கார்! கேரளா மற்றும் ஆந்திர வசூல் என்னவானது?!

விஜய் – இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவான சர்க்கார் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல், மக்களும் எதிர்பார்த்து காத்திருந்தனர். காரணம் அவர்கள் கூட்டணியில் ஏற்கனவே வெளியான கத்தி, துப்பாக்கி ஆகிய படங்கள் பெரிய வெற்றியடைந்தது மட்டுமல்லாமல், மக்களுக்கு சமூக கருத்துகளையும் கூறியது. அதனை தற்போது வந்த சர்கார் திரைப்படம் பூர்த்தி செய்ததா என்றால், கத்தி, துப்பாக்கி படம் அளவிற்கு இல்லை என்றுதான் கூறுகிறார்கள்.

தளபதி படத்திற்கு எப்போதும் ஓப்பனிங் நன்றாக இருக்கும் அது சர்க்கார் படத்திலும் பிரதிபலித்தது. அதேபோல் மற்ற மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு இருந்தது. அதுவும் தளபதியின் இன்னொரு கோட்டையான கேரளாவில் முதல் நாள் நல்ல வசூல் தான்.

அதன்படி, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் முதல் நாள் 2.31 கோடியும், இரண்டாம் நாளில் 2.09 கோடியும் வசூல் செய்தது. மொத்தம் இரண்டு நாளில் 4.4 கோடி வசூல் செய்துள்ளது. அதே போல கேரளாவில் முதல் நாளில் 6.6.கோடியும், இரணடாம் நாளில் 1.5 கோடியும் வசூல் செய்தது. இதனால் 8.1 கோடி வசூலை இரண்டு நாளில் செய்துள்ளது சர்கார் திரைப்படம். source : CINEBAR.IN

DINASUVADU