தங்கக்கவச முறைகேடு விவகாரம்: முன்ஜாமீன் கோரிய முத்தையா ஸ்தபதியின் மனு முடித்துவைப்பு!

சென்னை உயர்நீதிமன்றம்,திருத்தணி முருகன் கோயில் விமான தங்கக்கவச முறைகேடு விவகாரத்தை முன்வைத்து, முத்தையா ஸ்தபதி முன்ஜாமீன் கோரிய மனுவை  முடித்து வைத்தது.

இதுகுறித்து முத்தையா ஸ்தபதி தாக்கல் செய்திருந்த மனுவில், திருத்தணி முருகன் கோயிலில் மூலவர் விமானத்துக்கு தங்கக்கவசம் செய்யும் பணியில், பல கிலோ தங்கம் முறைகேடு செய்ததாக தன் மீது குற்றம்சுமத்தப் பட்டிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். அந்தப் பணிகளில் தாம் தலையிடவே இல்லை என்று குறிப்பிட்டிருந்த முத்தையா ஸ்தபதி, தாம் கைதாகக் கூடும் என்பதால், முன்ஜாமீன் வழங்குமாறு கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி என். சதீஷ்குமார் முன் வியாழனன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, முத்தையா ஸ்தபதி மீது ஏற்கனவே பெறப்பட்ட 10 புகார்கள் மீது விசாரணை நடந்து வருவதாகவும், திருத்தணி கோயில் முறைகேடு குறித்து வழக்குப்பதிவு எதுவும் செய்யப்படவில்லை எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப் பட்டது. இதையடுத்து, முன்ஜாமீன் மனுவை முடித்துவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment