ஜி.வி.பிரகாஷ் குமார் படத்தில் பாடகியான மணிரத்னம் பட நாயகி!!

தமிழ் சினிமாவில் வெகு பிசியாக நடித்து வரும் நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார். இவர் நடிப்பில் அடுத்ததாக ராஜீவ் மேனன் இயக்கத்தில் சர்வம் தாளமயம் இம்மாத இறுதியில் வெளியாக உள்ளது. இந்த படத்தினை தொடர்ந்து 100% காதல் , ஜெயில் , ஐங்கரன் என வரிசையாக படங்கள் வெளிவர உள்ளன.

இதில் வசந்தபாலன் இயக்கி வரும் ஜெயில் படத்தின் ஷூட்டிங் வேலைகள்.அனைத்தும் முடிந்தது. தற்போது இதன் பாடல் பதிவு வேலைகள் நடந்து வருகிறது. இந்த படத்தின் பாடல்களுக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் தான் இசைமமைக்கிறார். இதில் ஒரு பாடலை மணிரத்னத்தின் காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம் படத்தில் நடித்திருந்த அதிதி ராவ் பாடியுள்ளார். இவர் தமிழில் பாடும் முதல் பாடல் இதுவாகும்.

source : cinebar.in