சென்னை ஐஐடிக்கு புதிய இயக்குநர் நியமனம்!

சென்னை ஐஐடியின் புதிய இயக்குநராக வி.காமகோடி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை ஐஐடியின் புதிய இயக்குநராக வி.காமகோடி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.தற்போதயை சென்னை ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி அவர்கள்,தனது இரண்டாண்டு பதவிக்காலம் முடிந்து,ஓரிரு நாட்களில் ஓய்வுபெற உள்ள நிலையில்,புதிய இயக்குநராக வி.காமகோடி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை ஐஐடியின் கணிப்பொறியில் துறை பேராசிரியரான வி.காமகோடி அவர்கள்,விரைவில் புதிய இயக்குநராக பொறுப்பேற்க உள்ளார்.இவர் சென்னை பல்கலைக்கழக சமஸ்கிருத துறையின் முன்னாள் பேராசிரியர் வீழிநாதன் அவர்களின் மகன் ஆவார்.குறிப்பாக,இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ‘சக்தி’ என்ற நுண்செயலியை உருவாக்கிய குழுவிற்கு தலைமை தாங்கியவர் காமகோடி.பல்வேறு விருதுகளை பெற்றுள்ள இவர் மத்திய அரசின் தேசிய பாதுகாப்பு ஆலோசனை வாரியத்தின் உறுப்பினராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.