சீயான் விக்ரமின் தந்தை மரணம்; இந்திய திரையுலகினர் அதிர்ச்சி…!

நடிகர் சீயான் விக்ரமின் தந்தையும்,நடிகருமான வினோத் ராஜ் இன்று மாலை திடீரென மரணமடைந்துள்ளார். 80 வயதான அவர் விஜயின் திருப்பாச்சி, கில்லி போன்ற படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார்.

முன்னாள் இந்திய ராணுவ வீரரான இவருக்கு சினிமாவில் நடிக்க ரொம்ப ஆசை. இவர் இளைய தளபதி விஜயின் “கில்லி” படத்தில் நடிகையின் த்ரிஷாவிற்கு அப்பாவாக நடித்திருந்தார்.மேலும் சில முன்னணி தொலைக்காட்சி தொடர்களில் சிறிய சிறிய கதாப்பாத்திரத்திலும் அவர் நடித்துள்ளார். அவரது மறைவு சினிமா துறையில் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவரது உடல் கோடம்பாக்கத்தில் உள்ள மகாலிங்கபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இறுதி சடங்குகள் நாளை மாலை நடக்கவுள்ளது.சமீபத்தில் தான் சியான் விக்ரமின் மகள் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment