சீனாவுக்கு போட்டியாக இந்தியாவில் களமிறங்கும் உலகின் மிகப்பெரிய ஏர் பியூரிஃபையர்!!!

உலகில்  காற்று மாசுபாடு அதிகமாகி வருகிறது. அதுவும் உலகில் காற்று அதிகம் மாசுபாடுள்ள முதல் 10 நகரங்களின் பட்டியலில் 6 நகரங்கள் இந்தியாவை சேர்ந்தவை. அதிலும் குறிப்பாக இந்திய தலைநகர் டில்லி முதலிடத்தில் இருப்பது வேதனைக்குரிய விஷயம்.

இதற்க்கு காரணம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே இருக்கும் பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாடு என கூறப்படுகிறது. இதனை கட்டுபடுத்த  மாற்று சக்தியில் இயங்கும் வாகனங்களை உபோகிக்க அரசு மக்களிடம் பரிந்துரை செய்து வருகிறது.

இதனை கட்டுபடுத்த இந்தியாவை சேர்ந்த குரின் சிஸ்டம் என்கிற நிறுவனம் உலகில் அதிக அளவு காற்றை தூய்மைபடுத்தும் ஏர் பியூரிஃபையர்களை இந்தியாவிலேயே, இந்திய பொருட்களையே வைத்து தயாரித்து வருகிறது.

இந்த பிரமாண்ட பியூரிஃபையரானது சுமார் 3 கி.மீ சுற்றளவிற்க்கு மாசு காற்றை உள்வாங்கி கொண்டு 99.9% தூய்மைசடுத்தப்பட்ட காற்றை சுவாசிக்க வெளியிடும். இதனை சுமார் 75,000 பேர் பயனடைவர். இது ஒரு நாளைக்கு சுமார் 35 மில்லியன் கியூபிக் மீட்டர் காற்றை சுத்தபடுத்தும் திறன் கொண்டது. என குரின் சிஸ்டம்ஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதே போல சீனாவில் ஸியான் நகரில் காற்று தூய்மைபடுத்தும் மிகபெரிய ஏர் பியூரிஃபையர் உள்ளது. ஆனால் இது ஒரு நாளைக்கு 10 மில்லியன் கியூபிக் மீட்டர் காற்றை மட்டுமே தூய்மைபடுத்தும்.

DINASUVADU