சர்கார் இயக்குநர் மீது பாய்கிறது தேசதுரோக வழக்கு…!!வழக்குகளை கையில் எடுக்கும் தமிழக சர்கார்…!!!

நடிகர் விஜய் ,நடிகை கீர்த்தி சுரேஷ், நடிப்பில் நேற்று  உலகம் முழுவதும் ரிலீஸானது சர்கார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார், பழ.கருப்பையா, ராதாரவி, யோகி பாபு என முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து, சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்த படம் நல்ல வசூல் வேட்டையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

படம் முழுக்க முழுக்க தமிழக அரசியலை விமர்சனம் செய்யும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளது  தமிழக அரசின் இலவச மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறிகளை தூக்கி எறிவது போன்ற காட்சிகள் இடம்பெற்றது மற்றும்  படத்தின் வில்லி பாத்திரத்திற்கு ஜெயலலிதாவின் இயற் பெயரை சூட்டியது.
Image result for AR MURUGADOSS VIJAY
அதிமுகவினரை கோபம் அடைய செய்துள்ளது.இந்நிலையில் அதிமுக அமைச்சர் தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள்.இதற்கிடையே சர்கார் வெளியாகும் தியேட்டர்களில் அவர்கள்  போராட்டங்களை முன்னெடுக்க தொடங்கி விஜயின் பேனர்கள், கட் அவுட்களை கிழித்து ரகளையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் படத்தின் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.அதில் அவர் மீது தேச தூரோக வழக்கு பதியவேண்டும் என்று சமூக ஆர்வலர் தேவராஜன் என்பவர்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் படத்தில் இலவசப் பொருட்களை மக்கள் எரிக்கும் காட்சி அரசை இழிவுபடுத்துவதாக கூறிய இந்த புகாரை கொடுத்துள்ளார்.

DINASUVADU