சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி..!

சபரிமலையில் பெண்களை அனுமதிக்க தேவஸ்வம் போர்டு சம்மதம்

முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தின்,  சட்டமான பத்தனம் திட்டாவில் உள்ள, பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு, ஆண் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

Image result for சபரிமலையில் பெண்களைஇந்நிலையில், ‘சபரிமலை கோவிலுக்குள், அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்க வேண்டும்’ எனக் கோரி, இந்திய இளைஞர் வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் மகளிர் அமைப்பினர்,உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.இதற்க்கு முன்பு 10-55 வயது உடைய பெண்கள் கோவிலுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. காரணமாக பல தெய்வ விஷயங்கள் கூறப்பட்டன. இந்த மனு மீதான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில், மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன் நடந்தது.

இது தொடர்பாக, கேரள அரசு சார்பில், 2016, நவ., 7ல் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘சபரிமலையில், அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்க, அரசு தயாராக உள்ளது’ என, தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இதற்கு, திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு, கடும் எதிர்ப்பு தெரிவித்தது.இப்பொது அந்த எதிர்ப்பை உடைக்கும் வகையில் தீர்ப்பு வந்துள்ளது.

சபரிமலையில் பெண்களை அனுமதிக்க தேவஸ்வம் போர்டு சம்மதம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here