ஏற்கனவே சொத்து குவிப்பு வழக்கில் நீதிமன்றம் தண்டனை விதித்ததை அடுத்து புதுச்சேரி எம்.எல்.ஏ. அசோக் ஆனந்த் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி என்.ஆர். காங்கிரஸ் எம்.எல். ஏ.வாக அசோக் ஆனந்த் இருந்தார்.

Image result for எம்.எல். ஏ. அசோக் ஆனந்த்

இதன்மூலம்  தட்டாஞ்சாவடி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே  வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் புதுச்சேரி எம்.எல்.ஏ மற்றும் அவரின் தந்தை இருவருக்கும் தலா ஒரு வருட சிறைத்தண்டனை விதித்து சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Image result for எம்.எல். ஏ. அசோக் ஆனந்த்

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியின் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ அசோக் ஆனந்த். இவரது தந்தை ஆனந்தன் 2007-08  ஆகிய வருடங்களில்  புதுச்சேரி மாநிலப் பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளராகப் பணியாற்றினார். இவர்களுக்குச் சொந்தமாகத் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது.

Image result for எம்.எல். ஏ. அசோக் ஆனந்த்

ஆனந்தன் பதவி வகித்த காலத்தில் வருமானத்துக்கு அதிமாகச் சொத்துகளைக் குவித்ததாக சி.பி.ஐ-க்கு புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து ஆனந்தன் மற்றும் அவரின் மகன் அசோக் ஆனந்த் எம்.எல்.ஏ ஆகிய இருவரிடமும் சி.பி.ஐ விசாரணை நடத்தியது.இந்த வழக்கின் விசாரணை புதுச்சேரி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில்  தலைமை நீதிபதி தனபால் இருவருக்கும் தலா ஒரு வருடம் சிறைத்தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தார்.

Related image

மேலும் அபராதம் கட்டத்தவறினால் தலா 3 மாதம் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் வருமானத்துக்கு அதிகமாகக் குவிக்கப்பட்ட ரூ. 1.57 கோடி மதிப்புள்ள சொத்துகளைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார்.

Image result for எம்.எல். ஏ. அசோக் ஆனந்த்

இந்த நிலையில் நீதிமன்றம் தண்டனை விதித்ததை அடுத்து புதுச்சேரி எம்.எல்.ஏ. அசோக் ஆனந்தை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் நடவடிக்கை எடுத்துள்ளார்.இந்த செய்தி அங்குள்ள   மக்களை  அதிச்சியில் ஏற்படுத்தியுள்ளது.

DINASUVADU.