அதிவிரைவாக 10,000 ஒருநாள் ரன்களை எடுத்த வீரர் என்கிற பெருமை இன்றுவரை சச்சினுக்கு உண்டு. 259 இன்னிங்ஸில் 10,000 ரன்கள் எடுத்துள்ளார் சச்சின். 11 வருடம் 103 நாள்களில் இதை எட்டியுள்ளார். 263 இன்னிங்ஸில் இந்த இலக்கை எட்டி இரண்டாம் இடத்தில் உள்ளார் கங்குலி.

இந்நிலையில், இதுவரை 204 இன்னிங்ஸில், 9919 ஒருநாள் ரன்கள் எடுத்துள்ளார் கோலி. சச்சினை விடவும் 54 இன்னிங்ஸ் குறைவாவே விளையாடியுள்ளார். இதனால் நாளையோ அல்லது அடுத்து வரும் ஆட்டங்களிலோ 10,000 ரன்களை எட்டும்போது புதிய சாதனை படைத்தவராக இருப்பார் கோலி.