கேரளாவுக்கு ரூ.21 கோடி வழங்கிய நீதா அம்பானி ..!!

கேரளா மக்களின் வெள்ள பாதிப்பை அடுத்து அணைத்து தரப்பினரும் உதவி வருகின்றனர். தற்போது தான் இயல்பு நிலைக்கு திரும்பும் கேரளா மக்களின் வாழ்வாதாரங்களை செயற்படுத்த   பலரும் உதவி வருகின்றனர்.
கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு 21கோடி ரூபாயை வழங்கியுள்ளார் நீதா அம்பானி. திருவனந்தபுரத்தில் கேரளா முதலமைச்சர் புணராயி விஜயனை நேரில் சந்தித்து நீதா அம்பானி, 21 கோடி ரூபாய் காசோலை வழங்கினார். மேலும் நிவாரண முகாம்களில் தங்கி இருக்கும் மக்களையும் நேரில் சந்தித்தார்.

Leave a Comment