கர்நாடகத்தில் அமைச்சர் பதவி ஒதுக்கீடு முடிந்ததாக தகவல்!

மதச்சார்பற்ற ஜனதாதளத்துக்கு நிதித் துறை என்றும் காங்கிரசுக்கு உள்துறை என்றும் கர்நாடக அமைச்சரவையில் முடிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடகத்தில் மதச்சார்பற்ற ஜனதாதளம், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. முதலமைச்சராக மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் குமாரசாமியும் துணைமுதலமைச்சராகக் காங்கிரசின் பரமேஸ்வராவும் பதவியேற்றுள்ளனர். இரு கட்சிகளுக்கு இடையில் நிதி, உள்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட முதன்மையான துறைகளின் அமைச்சர் பதவியைப் பெறுவதில் இழுபறி நீடித்து வந்தது. இந்நிலையில் பல கட்டப் பேச்சுக்களுக்குப் பின் நிதித்துறையை மதச்சார்பற்ற ஜனதாதளம் வைத்துக் கொள்வது என்றும், உள்துறையை காங்கிரஸ் கட்சிக்கும் வழங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment