கந்த சஷ்டி பெருவிழா….சஷ்டி விரதம் எப்படி அனுஷ்டிக்க வேண்டும்..!!

இன்று அரோஹரா பக்தி கோஷத்திடன் ஆறுபடை வீடுகளிலும் துவங்கியது கந்த சஷ்டி திருவிழா

அழகென்ற சொல்லுக்கு முருகா உந்தன் அருளின்றி உலகிலில் பொருளேது முருகா…என்று தமிழ் கடவுளான ஆறுபடை வீட்டை தன்னகத்தே கொண்டு பக்தர்களிடம் திருவிளையாடல் புரிந்து அவர்களுக்கு தன் அருட்காடச்சை அள்ளி வழங்கும் அந்த அழகனை இந்த கந்த சஷ்டியில் தவம் இருப்பது போல விரதம் இருந்து மனதாரா மால்முருகனே மகிழ்ச்சி பொங்க வழிபடுவோம்.

Image result for கந்த சஷ்டி திருவிழா

கந்த சஷ்டியில் விரதம் இருப்பவர்கள் அழியாத புகலும்,பிள்ளை பெறும் கிடைக்கும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.இந்த சஷ்டியில் அதிகம் பெண்களே இந்த விரதத்தினை மேற்கொள்வார்கள்.6 நாட்கள் வெகுவிமர்சையாக நடைபெறும் இந்த விழா இன்று தொடங்கி தொடர்ந்து 6 நாட்கள் நடைபெறும் விழா வரும் 13 ம் தேதி முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.பெருமாள் என்றால் ஏகதேசி விரதம்,சிவன் என்றால் சிவராத்திரி,விநாயகர் என்றால் சதுர்த்தி அப்படி முருகன் என்றால் சஷ்டி விரதம் இந்த விரத்தினை எப்படி கடைப்பிடிப்பது என்று பார்ப்போம்

Image result for கந்த சஷ்டி திருவிழா

தீபாவளி அமாவாசைக்கு மறுநாள் பிரதமை முதல் நாளில் கந்தசஷ்டி விரதம் மேற்கொள்ளப்படுகிறது.மற்ற விரதங்களை போல் இந்த விரதம் கிடைப்பது மற்ற விரதங்கள் ஒரே நாளில் முடிவடைந்து விடும் ஆனால் சஷ்டி அப்படியில்லை 6 நாட்கள் தொடர்ந்து விரதம் இருந்து விரதத்தோடு விரத நாயகனை வழிபடுகிறார்கள். இந்த ஆறு நாட்களில் காலையும் இரவும் பட்டினியாக இருத்தல் வேண்டும். பகல் பொழுதான மதியம் மட்டும் பச்சரியால் ஆன தயிர் சதத்தை உணவாக சாப்பிடலாம்.  குறிப்பாக இந்த நாட்களில் துவைத்து காயவைத்த தூய்மையான ஆடைகளையே அணிய வேண்டும்.விரதத்தின் போது மெளன விரதம் அனுஷ்டிப்பது மிகச்சிறப்பு. மாலை ஆனதும் தம்பம், பிம்பம், கும்பம் ஆகியவற்றில் முருகப் பெருமானை ஆவாஹனம் செய்து வழிபட்டால் நல்லது.இல்லை என்றால் வீட்டில் முருகன் படம் இருந்தாலும் போதும் அவரை மனம் வருந்தி வழிப்பட்டால் போதும் மேலும் வெல்லத்தாலான மோதகத்தை நிவேதனம் செய்து வழிபட்டால் இன்னும் விசேஷம்.

Image result for கந்த சஷ்டி திருவிழா

இந்த ஆறு நாட்களில் விரதம் இருப்பவர்கள் கந்தபுராணம், கந்தர் கலிவெண்பா, கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம் ஆகிய நூல்களைப் படித்தல், கேட்டல் மிகவும் நல்லது. இதனால் வீட்டில் உள்ள தீயசக்திகள் அகன்று. வீட்டில் சுபிட்சம் குடிகொள்ளும். விழாவிம் முக்கிய ஆறாம் நாள் கந்தசஷ்டியன்று முழு உபவாசமிருந்து அய்யனுக்கு பூஜைகள் செய்து  ஏழாம் நாள் காலை அன்னதானம் செய்து விரதத்தை முடிக்க வேண்டும்.

Image result for கந்த சஷ்டி திருவிழா

இவ்வாறு ஆறு ஆண்டுகள் முறைப்படி இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் அருளும் பொருளும் கிடைத்து ஞானத்துடனும் யோகத்துடனும் வாழலாம்.மேலும் குழந்தை பேறு கிடைக்கும் குழந்தை வரம் தரும் கடவுள் முருக பெருமான் என்பது குறிப்பிடத்தக்கது.அரோஹரா கோஷத்துடன் நாமும் அழகனை வழிபட்டு வளங்களை வள்ளி மணவாளனிடமிருந்து அருளை அள்ளி கொள்வோம்.

Related image

யாமிருக்க பயமேன் …வேலும் மயிலும் துணை நிற்கட்டும் சுபம்.,

DINASUVADU