கடலோர மாவட்டங்களில் 10,000 பண்ணைக் குட்டைகள் -நபார்டு வங்கி திட்டம்

கடலோர மாவட்டங்களில் 10 ஆயிரம் பண்ணைக் குட்டைகள் அமைக்க நபார்டு வங்கி திட்டமிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2013-14 ஆண்டுகளில் ஐந்து ஆண்டு திட்டமாக, சுமார் 5 ஆயிரத்து 210 பண்ணைக் குட்டைகள் விவசாயிகளுக்கு வெட்டி கொடுக்க திட்டமிட்டு, நபார்டு வங்கியின் முழு மானியத்துடன் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. இதன்மூலம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் பத்தாயிரம் ஏக்கர் விவசாயம் நடைபெற்றுள்ளது.

இதனால் விவசாயிகள் வாழ்வாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டு, இந்தாண்டு தமிழகத்திலுள்ள கடலோர மாவட்டங்களில் 10 ஆயிரம் பண்ணைக்குட்டைகள் வெட்டுவதற்கு நபார்டு வங்கி பண உதவி செய்ய உள்ளது. இதனையடுத்து, கீழக்கரை தாலுகாவில் உள்ள பனையடியேந்தல் என்ற கிராமத்தில் வெட்டப்பட்ட பண்ணைக் குட்டைகளை நபார்டு வங்கியின் பொது மேலாளர் பத்மா ரகுநாதன் பார்வையிட்டார்.