கஜா புயல் நிவாரணப் பணிகளுக்கு மேலும் ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு…!!

    

கஜா புயலால் பாதிப்படைந்த மரங்களை அகற்ற, மர அறுவை இயந்திரம் வாங்க தமிழக அரசு 7 கோடியே 60 லட்சம் ரூபாய் கூடுதல் நிதியை ஒதுக்கியுள்ளது.

கடந்த மாதம் தமிழகத்தில் ஏற்பட்ட கஜா புயலால் நாகை, தஞ்சாவூர், உள்பட 12 மாவட்டங்கள் கடும் சேதத்தை சந்தித்தன. இதன் காரணமாக மரங்களை அகற்றும் பணியை தமிழக அரசு முடுக்கிவிட்டது. இதற்காக மரம் அறுவை இயந்திரங்கள் வாங்க நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வந்தன.

தற்போது மேலும் மரங்களை அகற்றுவதற்காக, 7 கோடியே 60 லட்சம் ரூபாய் நிதியை தமிழக அரசு கூடுதலாக ஒதுக்கியுள்ளது. இதனால் பாதிப்படைந்த மாவட்டங்களில் மரங்களை அகற்றும் பணியை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது.