ஓசூர் அருகே ரூ.3 லட்சம் கலப்பு திருமணம் செய்தவருகு அபராதம்,வீட்டுக்கு முள்வேலி!

கலப்பு திருமணம் செய்து கொண்டவருக்கு ஓசூர் அருகே 3 லட்சம் ரூபாய் அபராதம் விதித்ததோடு, அபராதம் செலுத்தாததால் வீட்டுக்கு முள்வேலி அமைத்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒன்றரை ஆண்டுக்கு முன்  ஜோகிர்பாளையத்தை சேர்ந்த சந்துரு அதே கிராமத்தை சேர்ந்த வேறு சாதியைச் சேர்ந்த தேவயானி என்பவரைக் காதலித்து மணம் முடித்துக் கொண்டு கோவையில் வசித்துள்ளார். இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ள நிலையில், சில தினங்களுக்கு முன்பு சந்துரு தனது குடும்பத்துடன் ஜோகிர்பாளையத்திற்கு வந்துள்ளார்.

இந்நிலையில் தற்போது,உள்ளூர் பஞ்சாயத்தார் கலப்பு திருமணம் செய்து கொண்டதற்காக, சந்துரு குடும்பத்தினருக்கு 3 லட்சம் ரூபாயும், தேவயானி குடும்பத்தினருக்கு 50 ஆயிரம் ரூபாயும்  அபராதம் விதித்துள்ளனர்.

சந்துருவின் வீட்டுக்கு பூட்டு போட்ட பஞ்சாயத்தார், வீட்டை சுற்றி முள்வேலியையும் அபராதத் தொகை முழுவதையும் குறித்த காலத்தில் செலுத்தாததால் அமைத்து அவரது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டலும் விடுத்ததாக சொல்லப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், ஜோகிர்பாளையம் சென்ற சூளகிரி போலீசார், முள்வேலியை அகற்றினர். கட்டப்பஞ்சாயத்து செய்த ராகவன், சின்னராஜ், கோவிந்தன், செல்வம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Leave a Comment