ஒரே நாள்…ஒரே ஆட்டம்… 5 சாதனை..அசத்திய ரோஹித் சர்மா…!!

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவரும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக லக்னோவில் நடைபெற்ற‌ இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. துவக்க வீரர்களாக களமிறங்கிய ரோஹித் ஷர்மா, தவான் ஜோடி மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சை விளாசி தள்ளியது.

இந்த போட்டியில் சிறப்பாக ஆடி சதமடித்த ரோஹித் ஷர்மா ஒரே போட்டியில் 5 சாதனைகளை புரிந்துள்ளார். முதலில் 11 ரன்கள் எடுத்த நிலையில் விராட் கோலியிடமிருந்த டி20 போட்டிகளில் அதிக ரன் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையை முறியடித்தார்.

பின்னர் போட்டிக்கு முன் சர்வதேச அளவில் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் 5வது இடத்தில் இருந்த ரோஹித் 3 பேரின் ரன்களை அடுத்தத இடைவெளியில் கடந்து 98 ரன்களை எட்டிய போது அதிக ரன்குவித்த இரண்டாவது சர்வதேச வீரர் என்ற சாதனை படைத்தார். முதலிடத்தில் நியூஸிலாந்தின் மார்ட்டின் கப்தில் 2271 ரன்களுடன் முதலிடத்திலும், ரோஹித் ஷர்மா 2203 ரன்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

நேற்றைய போட்டியில் சதமடித்ததன் மூலம் டி20 வரலாற்றில் உலக அளவில் டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதமடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவரில் 124 ரன்களை மட்டுமே எடுத்ததால் 71 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. மேலும் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய வென்றது. ரோஹித் ஷர்மா ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

dinasuvadu.com