ஒரே ஒவரில் 6 சிக்ஸர்,பவுண்டரி என்று பந்தை பறக்கவிட்டு..!! 43 ரன்களை குவித்து உலக சாதனை…!!

ஒரே ஒவரில் 6 சிக்ஸர் மற்றும் பவுண்டரியுடன் 43 ரன்களை அதிரடியாக ஆடி உலக சாதனை புரிந்துள்ளனர் வீரர்கள்.

நியூஸிலாந்தில் உள்ளூர் ஒருநாள் போட்டி தொடர் நடந்து வருகிறது.அந்நாட்டின் அணியான நார்தன் டிஸ்ட்ரிக்ட்ஸ் மற்றும் சென்ட்ரல் டிஸ்ட்ரிக்ட்ஸ் அணிகள் இடையில் ஒருநாள் போட்டி தொடரில் தான் இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. நியூஸிலாந்தில் ஹாமில்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட் செய்த நார்தன் டிஸ்ட்ரிக்ட்ஸ் அணி  நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு தனது சார்பாக 313 ரன்கள் எடுத்தது. எதிர் அணிக்கு 314 ரன்களை இலக்காக வைத்தது.314 என்ற இலக்குடன் களமிறங்கிய சென்ட்ரல் டிஸ்ட்ரிக்ட்ஸ் அணி ரன் எடுக்க முடியாமல்  50 ஓவர் முடிவில் 288 ரன்கள் மட்டுமே சேர்த்து  தோல்வி அடைந்தது.ஆனால் நார்தன் டிஸ்ட்ரிக்ட்ஸ் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் நார்தன் டிஸ்ட்ரிக்ட்ஸ் அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அணி பேட்ஸ்மேன்களான ஜோ கார்ட்டர் மற்றும் பிரெட் ஹாம்ப்டன் ஒரே ஒவரில் 6 சிக்ஸர்களை பறக்கவிட்டு,ஒரு பவுண்டரி என்று அசத்தி 43 ரன்களை குவித்து உள்ளனர்.இதனால் ரன்னானது அந்த அணிக்கு கிடுகிடுவென உயர்ந்தது. இதுவே அந்த அணி ரன்குவிப்புக்கு சற்று உதவியாக இருந்தது.

ஒரே ஒவரில் 6 சிக்ஸர் மற்றும் பவுண்டரி 43 ரன் கள் இது முன்னதாக வங்கதேச பிரீமியர் லீக் தொடரில் ஷேக் ஜமால் தன்மோண்டி அணிக்காக விளையாடிய ஜிம்பாவே வீரர் எல்டன் சிகும்பரா அபானி லிமிடெட் அணிக்கு எதிரான போட்டியில் 39 ரன் கள் குவித்ததே சாதனையாக இருந்தது.இந்த சாதனையை நியூஸிலாந்து அணி வீரர்கள் உடைத்துள்ளனர்.

DINSUVADU