ஒருவர் விரும்பினால், அவரது ஆதார் தகவல்களை திரும்ப பெற்று கொள்ளலாம்! விரைவில் வெளிவரவுள்ளது புதிய சட்டம்!!!

3414

ஆதார் எண் என்பது தற்போது பல இடங்களில் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. இது முக்கிய ஆதாரமாகவும் பார்க்கப்படுகிறது. மேலும் மொபைல் எண், வங்கி கணக்கு , அரசின் பல திட்டங்கள் என பலவற்றிற்கு ஆதார் ஆதாரம முக்கியமாக பார்க்கப்பட்டது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள்  தொடரப்பட்டு இருந்தது.

இதில் தனி மனித உரிமை என்பது இந்திய குடிமகனின் அடிப்படை உரிமை. இதன் அடிப்படையில் ஆதார் தனியார் நிறுவனங்கள் கூட கட்டாயமாக கேட்டபதை வழக்காக உச்சநீதிமன்றம் விசாரித்தது. இதில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், அரசியல் சட்டப்படி ஆதார் சரியானது தான். ஆதார் எண்ணை போலியாக உருவாக்க முடியாது.இருந்தபோதிலும் மக்களின் தனிப்பட்ட தகவல்களை உரியமுறையில் பாதுகாக்க வேண்டி கடமை அரசுக்கு உள்ளது என்றும், அதற்கு தகுந்த வகையில் ஆதார் சட்டங்களில் திருத்தம் செய்யப்பட வேண்டும்.

மேலும் குறிப்பாக தனியார் நிறுவனங்களுக்கு ஆதார் தகவல்களை தருவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது,எனவே தான்
ஆதார் சட்டத்தின் 57-வது பிரவு ரத்து செய்யபடுகிறது. பின்பு ஆதார் எண்ணுக்கு வேண்டி அரசின் சலுகைகள் நிறுத்தப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும். வங்கிகள், மொபைல் இணைப்பு பெற ஆதார் தேவை என கட்டாயப்படுத்தக்கூடாது.

இருந்தாலும், ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்கும் அரசின் முடிவு சரியானதே. இதனால் பல முக்கிய தீர்ப்புகள் ஆதார் எண் வழக்கு குறித்து வெளிவரவுள்ளன. அதிலும் குறிப்பாக வங்கி கணக்கு உடன் ஆதாரை இணைத்து உள்ளதை திரும்ப பெற்றுக்கொள்ளும் தீர்ப்பும் வெளிவரும்  என எதிர்பார்க்கப்படுகிறது.

DINASUVADU