உலகின் மிகவும் புகழ்பெற்ற ஸ்மார்ட்போன்களில் ஒன்றான தரம்  வாய்ந்த ஒன்பிளஸ் நிறுவனம் தற்சமயம் இந்தியாவின் நம்பர் 1 மற்றும் வேகமாக வளர்ந்து வரும் ரிலையன்ஸ் டிஜிட்டல் நிறுவனம்  கைகோர்த்துள்ளது. மேலும் இந்நிறுவனம் விரைவில் இந்திய சந்தையில் ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் தெறிவிக்கின்றன.

 

Related image

இதில் குறிப்பாக ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்களில் இந்த ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் மாடல்கள் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அதிக வரவேற்பை பெறும் என அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.குறிப்பாக ஆஃப்லைன் எனப்படும் சந்தையில் அதிகளவு ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்வதற்கு தான் இந்த ஒன்பிளஸ் நிறவனம்  ரிலையன்ஸ் டிஜிட்டல் நிறுவனத்துடன்  கைகோர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related image

மேலும் ஒன்பிளஸ் 6டி ஸ்மார்டபோனை ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்களில் மிகவும் எளிமையாகவும் விரைவாகவும் பெற முடியும் என ஒன்பிளஸ் நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போன் ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் அதே விலையில் தான் ரிலையன்ஸ் டிஜிட்டல் ஆஃப்லைன் ஸ்டோர்களில் விற்பனை செய்யப்படும் என்று அந்நிறுவனம் சார்பாக தெறிவிக்கப்பட்டுள்ளது.

 

Related image

மேலும் வாடிக்கையாளர்கள் எளிமையாக இந்த ஸ்மார்ட்போனை வாங்க உதவும் வகையில் இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளதாக  ஒன்பிளஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. ஒன்பிளஸ் மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் கைகோர்த்து அதிக ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்யும் என்று நம்பப்படுகிறது.

 

Related image

அதன்படி டெல்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் இந்த ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனை உடனே வாங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு க்ரோமோ ஸ்டோர்களிலும் இந்த ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன்கள் விரைவில் விற்பனைக்கு வரும் என ஒன்பிளஸ் நிறுவனம் கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

DINASUVADU.