12-வது ஐ.பி.எல் போட்டிக்கான ஏலத்தில்  70 வீரர்கள் இடத்திற்கு 1000 வீரர்கள் பதிவு செய்து உள்ளனர்.
12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடைபெற இருப்பதால் வீரர்களின் ஏலம்  வருகிற 18-ந்தேதி ஜெய்ப்பூரில் நடைபெற இருக்கிறது.பெரும்பாலான வீரர்கள் தக்கவைக்கப்பட்டு விட்டதால் இந்த ஏலத்திற்கு இன்னும் 70 வீரர்கள் மட்டுமே தேவை படுகின்றது.காலியாக இருக்கும்  70 இடத்திற்கு சுமார்  1,003 வீரர்கள் பெயர் பதிவு செய்துள்ளனர்.இதில் 232 வெளிநாட்டு வீரர்களும் அடங்குவர்.
12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் விளையாட போகும் வீரர்களின்  இறுதிப் பட்டியலை வருகிற 10-ந்தேதி மாலை 5 மணிக்குள் அணி நிர்வாகங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கபட்டுள்ளது.இந்நிலையில் கடந்த ஐபிஎல் தொடரில் சொதப்பியதால் அணி நிர்வாகத்தால் கழற்றி விடப்பட்ட வீரர்கள் எப்படியாவது குறைந்த விலையிலாவது ஏதாவது ஓர் அணியில் ஒட்டிக்கொள்ளும் ஆர்வத்தில் உள்ளனர்.இந்திய அணி நட்சத்திர வீரராக திகழ்ந்து தற்போது இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்ட யுவராஜ் சிங் மீண்டும் ஐபிஎல் தொடரில் தலைகாட்ட முயல்கிறார்.இதற்கு முன்னர் நடந்த ஐபிஎல் தொடர்களில் யுவராஜ் சிங்கை அணிகள் 16 கோடி மற்றும் 14 கோடி எல்லாம் கொடுத்து எடுத்தனர்.
ஆனால் தற்போது யுவராஜ் ஏற்பட்டுள்ள நிலைமை  அவரது ரசிகர்களுக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.