Categories: இந்தியா

ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ நிர்வாகம் மீது எப்.ஐ.ஆர். பதிவு..!

நாட்டில் மிக பெரும் தொலை தொடர்பு நிறுவனங்களாக ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ இருந்து வருகிறது.
இந்நிலையில், ஜம்மு மற்றும் காஷ்மீரின் கிஸ்த்வார் மாவட்டத்தில் சத்ரூ முதல் சிந்தன் டாப் வரையிலான பகுதியில் அமைந்த சாலையில் கேபிள்கள் அமைப்பதற்காக 62 கி.மீட்டர் தொலைவிற்கு சாலை சேதப்படுத்தப்பட்டு உள்ளது.
இதனை கவனத்தில் கொண்ட தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சி கழகம் போலீசில் புகார் அளித்துள்ளது.
இதனை தொடர்ந்து, சாலையை சேதப்படுத்தியதற்காக பார்தி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகிய தொலைதொடர்பு நிறுவனங்களின் நிர்வாகம் மீது எப்.ஐ.ஆர். போடப்பட்டு உள்ளது.
அந்நிறுவனத்துடன் தொடர்புடைய 6 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இதுபற்றி போலீசார் கூறும்பொழுது, இந்த நிறுவனங்களின் நிர்வாகத்தினர் அனுமதியின்றி விதிகளை மீறி தேசிய நெடுஞ்சாலை 244ஐ சேதப்படுத்தி உள்ளனர்.  அது சாலை என்றில்லாமல் நீர் போக்குவரத்து பகுதியாகவும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது என தெரிய வந்துள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
Dinasuvadu desk

Recent Posts

தெலுங்கு பாட்டே வேண்டாம்! கில்லி படத்தில் சொல்லி அடித்த வித்யாசாகர்!

Ghilli : கில்லி படத்தில் பாடல்கள் எல்லாம் ஹிட் ஆகும் என தயாரிப்பாளரிடம் வித்யாசாகர்  உறுதியாக கூறி செய்து காட்டியுள்ளார். தெலுங்கில் மகேஷ் பாபு  நடிப்பில் வெளியாகி…

19 mins ago

ஒரே நாளில் ரூ.1,160 குறைந்தது தங்கம் விலை…சரிந்தும் இன்பமில்லா இல்லத்தரசிகள்.!

Gold Price : கடந்த சில நாள்களாக உயர்ந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று பெருமளவில் குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த தங்கத்தின்…

30 mins ago

நடு வானில் 2 மலேசியா ராணுவ ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து…10 பேர் உயிரிழப்பு!

Helicopter Crash: மலேசியாவின் லுமுட் நகரில் 2 கடற்படை ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளானதில்10 வீரர்கள் பலியாகினர். மலேசியாவில் கடற்படை பயிற்சியின்போது இரு ஹெலிகாப்டர்கள் மோதி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது.…

51 mins ago

2026ஐ குறிவைக்கும் காங்கிரஸ்.? கேரளாவில் இறங்கி அடிக்கும் ராகுல்.!

Kerala Election 2024 : கேரளாவில் கடந்த முறை போல இந்த முறையும் மக்களவை தேர்தலில் தடம்பதிக்க காங்கிரஸ் தீவிரமாக வேலை செய்து வருகிறது. நாட்டில் நாடாளுமன்ற…

1 hour ago

பிரதமர் பதவியை வகிக்க மோடி தகுதியற்றவர் – செல்வப்பெருந்தகை

Election2024: பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கடும் கண்டனம். கடந்த 19ம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்களில் மக்களவை தேர்தலின்…

2 hours ago

பிரச்சாரத்தில் சர்ச்சை பேச்சு… பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்.!

Congress complaint: பிரிவினையை தூண்டும் வகையில் பிரதமர் மோடியின் பேச்சு இருப்பதாக கூறி அவருக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது. இந்தியாவின் மக்களவை…

3 hours ago