‘என் வீட்டிற்கு போலிஸ் வந்தார்கள்’- ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட தகவல்!!?

தளபதி விஜய் மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவான திரைப்படப் சர்கார். இப்படத்தின் பெயர் அறிவித்த நாள் முதல் இன்று வரை இதன் சர்ச்சைகளும், பிரச்சனைகளும் ஓய்ந்தபாடில்லை. படத்தில் விஜய் அதிகமாக சிகெரெட் பிடிக்கிறார், அரசை விமர்சிக்கிறார் என பல போராட்டங்களை படக்குழு சந்தித்து வருகிறது.

இப்படத்தில் ஒரு பாடல் காட்சியில் முருகதாஸ், அதிமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட இலவச மிக்ஸியை தீயில் எரிவது போல காட்சி இருந்தது. இதனை கண்டித்து அதிமுககாரர்கள் பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இயக்குனர் மீது போலிஸில் புகாரும் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த புகரை அடுத்து போலிஸார் அவரது வீட்டிற்கு விரைந்தனர். ஆனால் ஏ.ஆர்.முருகதாஸ் வீட்டில் இல்லாததை தொடர்ந்து அவர்கள் புறப்பட்டு சென்றனர். இதனை முருகதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். Source CINEBAR.IN

DINASUVADU