சுவையான  பழங்களில்  சப்போட்டா பழமும் ஓன்று.அனைவராலும் விரும்பி சாப்பிட கூடிய பழம் ஆகும். இந்த பழம் சுவையை மட்டும் அல்ல நல்ல சத்துகளையும் தன்னுள் கொண்டுள்ளது.Image result for சப்போட்டா பழம்
எலும்புகள் வலுவடையும், சருமம் பளபளப்பாகவும் தினமும் இரண்டு சப்போட்டா பழம் சாப்பிட்டால் போதும். 100 கிராம் சப்போட்டா பழத்தில் 28  மில்லி கிராம் கால்சியமும், 27 மில்லிகிராம் பாஸ்பரசும் உள்ளது. Image result for சப்போட்டா பழம்
சப்போட்டா உடம்பில் உள்ள  தேவையில்லாத கொழுப்பை குறைக்கும். சப்போட்டா பழத்தை அப்படியே சாப்பிட பிடிக்காதவர்கள், இரண்டு பழத்துடன், ஒரு டம்ளர் பால் சேர்த்து, மிக்ஸியில்  அடித்து மில்க் ஷேக் செய்து சாப்பிடலாம்.
Image result for சப்போட்டா பழம்சப்போட்டா பழ சதையை எடுத்து அத்துடன் ரோஸ் வாட்டர், சிறிது சந்தன பவுடர் கலந்து கிரீமாக தயார் செய்து கொள்ளவும். இந்த கிரீமை முகம் முதல்  கழுத்துவரை இட, வலமாக தடவ வேண்டும். காய்ந்த பின்னர் இளம் சூடான நீரில் முகம் கழுவ வேண்டும். வாரம் இருமுறை இதுபோல செய்து வர  பளபளவென கன்னம் மின்னும்.
ஒரு டீஸ்பூன் பயத்தமாவுடன் அரை டீஸ்பூன் சப்போட்டா பழ விழுது, 4 துளி விளக்கெண்ணெய் கலந்து, குளிப்பதற்கு முன் உள்ளங்கை, விரல், நகம்,  பாதங்களில் தடவி, குளித்து வர அவை வறட்சி நீங்கி மென்மையாக மிளிரும்.
தற்போது முடி கொட்டும் பிரச்சனை அதிக நபர்களுக்கு உள்ளது.அவ்வாறு  முடி கொட்டும் பிரச்சனை உள்ளவர்கள் ஒரு டீஸ்பூன் சப்போட்டா கொட்டை பவுடருடன், ஒரு கப் நல்லெண்ணெய், கால் டீஸ்பூன் மிளகுத்தூள் கலந்து அடுப்பில் வைத்து கை பொறுக்கும் சூட்டில் காய்ச்தி, ஆறவைத்து வடிகட்டி இதனை சிறிதளவு பஞ்சில் நனைத்து தேய்த்து அரைமணிநேரம் ஊறவைக்க வேண்டும். சீயக்காய் தேய்த்து குளிக்க ஒரு மாதத்தில் முடி கொட்டுவது நீங்கும்.