இளைஞர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி, இந்தியாவில் அறிமுகமானது சுசூகி இன்ட்ரூடர்!

21
  • இந்தியாவில் புதிய ரக மாடலில், சுசுகி இன்ட்ரூடர் இருசக்கர வாகனம் அறிமுகமாகியுள்ளது.

இந்த இருசக்கர வாகனம் குறித்து சுஸுகி மோட்டார் சைக்கிள்  கூறுகையில், சொகுசான பயண அனுபவம், பில்லியனில் சாய்மானம் மற்றும் அதிகத் திறன் கொண்ட பைக்காக இருக்கும் என்றும், அப்டேட் செய்யப்பட்ட ஷிஃப்ட் கியர், ப்ரேக் பெடல் என அசத்தும் இன்ட்ரூடர் 155cc இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

மேலும், சுசூகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் துணைத் தலைவர் தேவஷிஸ் ஹண்டா கூறுகையில், “இன்றைய நவீன கால வடிவமைப்பு மற்றும் உயரிய தோற்றம் கொண்ட சுசூகி இன்ட்ரூடர் 2019, க்ரூஸர் ரக பைக் விரும்பிகளுக்கு ஏற்றதாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

இந்த மோட்டார் சைக்கிள், பிளாக் மற்றும் ரெட் ஆகிய இரு நிறங்களில் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.