இலங்கையில் நிலவி வரும் அரசியல் குழப்பம் முடிவுக்கு வரும்…அதிபர் சிறிசேனா நம்பிக்கை…!!

ஒருவாரத்திற்குள் இலங்கையில் நிலவி வரும் அரசியல் குழப்பம் முடிவுக்கு வரும் என்று அந்நாட்டு அதிபர் சிறிசேனா தெரிவித்துள்ளார். இலங்கையின் பிரதமராக இருந்த ரணிலை பதவியிலிருந்து நீக்கிவிட்டு ராஜபக்சவை புதிய பிரதமராக அந்நாட்டு அதிபர் சிறிசேனா நியமித்தார். இதனையடுத்து நாடாளுமன்றம் கலைப்பு, உச்ச நீதிமன்றம் தலையீடு என இலங்கை அரசியல் குழப்பம் உச்சத்தை எட்டியுள்ளது.

குறிப்பாக நாடாளுமன்றத்தில் ராஜபக்சவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றதை அதிபர் சிறிசேனா ஏற்க மறுத்து வருகிறார். இதனிடையே பிரதமராக ராஜபக்ச தொடரக்கூடாது என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதேசமயம் அவர் எப்படி பிரதமராக நியமிக்கப்பட்டார் என்பது குறித்தும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்தநிலையில் இலங்கையில் நிலவி வரும் அரசியல் குழப்பம் ஒருவாரத்திற்குள் முடிவுக்கு வரும் என்று அந்நாட்டு அதிபர் சிறிசேனா அறிவித்துள்ளார்.

DINASUVADU.COM