,

இருசக்கர வாகனம் கற்றுத்தருவதாக அழைத்துச் சென்று சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியர்..!10 ஆண்டுகள் சிறை!

By

பெரம்பலூர் மகிளா நீதிமன்றம், பெரம்பலூர் அருகே, சிறுமியை பலாத்காரம் செய்த  முதியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.

பெரம்பலூர் மாவட்டம், கூடலூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவப்பிரகாசம். இவர், கடந்த 2016ம் ஆண்டு நவம்பர்  27ம் தேதி இதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியிடம் இரு சக்கர வாகனம் கற்றுத்தருவதாக அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து, சிறுமியின் தாய் மஞ்சுளா, பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில், சிவப்பிரகாசம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கின் விசாரணை பெரம்பலூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார். சிவப்பிரகாசத்துக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். அபராதம் கட்ட தவறினால் மேலும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Dinasuvadu Media @2023