இன்ஸ்டாகிராமில் பிரபலமாக விளங்கும் உலக தலைவர்கள் பட்டியல் – மோடி முதலிடம்

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபலமாக விளங்கும் உலக தலைவர்களின் பட்டியலில் மோடி முதலிடம் பிடித்துள்ளார்.

பிரதமர் மோடி பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதில் அதிக ஆர்வம் கொண்டவர். தனது பேஸ்புக் பக்கம் மூலம் 4 கோடிக்கும் அதிகமான லைக்குகளை குவித்திருக்கும் அவர், தனது டுவிட்டர் தளத்தில் 4.3 கோடி பின் தொடர்பாளர்களையும் கொண்டிருக்கிறார்.

இவருக்கு அடுத்தபடியாக 1.22 கோடி பின்தொடர்பாளர்களை பெற்றிருக்கும் இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ 2-வது இடத்தையும், 1 கோடி பின்தொடர்பாளர்களை பெற்றிருக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப், 3-வது இடத்தையும் பெற்று உள்ளனர். இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பிரதமர் மோடி தீவிரமாக இயங்கி வருகிறார். இந்த பக்கத்தில் அவரை 1.48 கோடி பேர் பின்தொடர்கின்றனர்.