ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில்  இந்திய அணி 250 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து  4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டு நகரில் நேற்று தொடங்கியது. ‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணியினரின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இந்திய அணியின் விக்கெட்டுகள் மளமளவென வீழ்ந்தது.
இந்திய அணியின் புஜாரா மட்டும் நிலைத்து நின்று நம்பிக்கை அளித்தார். நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை மீட்டேடுத்தார்.அசத்தலாக ஆடிய புஜாரா சதம் அடித்தார்.விக்கெட்டுக்கள் வீழ்ந்தாலும் நிலைத்து நின்று ஆடிய புஜாரா 123 ரன்கள் சேர்த்து இருந்த நிலையில், துரதிருஷ்டவசமாக ரன் ஆவுட் ஆகி வெளியேறினார்.இந்தியா 87.5 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 250 ரன்கள் அடித்து இருந்த நிலையில், நேற்றைய ஆட்டம் முடித்துக்கொள்ளப்பட்டு ஆட்ட  களத்தில், சமியும் ஜஸ்பிரித் பும்ராவும் நின்றனர்.இன்று 2 ஆம் நாள் ஆட்டம் துவங்கியதும் வீசப்பட்ட முதல் பந்திலேயே முகம்மது சமி ஆட்டமிழந்தார்.இதனால் இந்திய அணியின் முதல் இன்னிங்சும் 250 ரன்களோடு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஹேசில்வுட் 3 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க், கம்மின்ஸ், நாதன் லயன் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.ஆஸ்திரேலிய அணி தன்னுடைய ஆட்டத்தை ஆடி வருகின்றது.