ஆவின் பால் கூட்டுறவு சங்கத்தில் வேலைவாய்ப்பு..!!

99

தஞ்சாவூரில் செயல்பட்டு வரும் ஆவின் பால் கூட்டுறவு சங்கத்தில் காலியாக உள்ள டெக்னீசியன் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Related imageபதவி: Deputy Manager (Engineering) – 01
பதவி: Junior Executive (Typing) – 01
பதவி: Driver (LVD) – 01
பதவி: Technician (Operation) – 01

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேசன், ஆட்டோமொபைல், மெக்கானிகல் போன்ற துறைகளில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள், ஏதாவதொரு துறையில் பட்டத்துடன் தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சில் முதுநிலை தேர்ச்சி, எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்கள், பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மெக்கானிக், பிட்டர், எல்க்ட்ரீசியன், ஏர்கண்டிஷனர் போன்ற துறைகளில் ஐடிஐ முடித்தவர்கள் அல்லது டிப்ளமோ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க் தகுதியானவர்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.250, எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ பிரிவினருக்கு ரூ.100. இதனை The General Manager, TDCMP, Thanjavur என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.10.2018

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.aavinmilk.com/hr.html என்ற வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

DINASUVADU