மத்திய மின் நிறுவனத்தில் ஆபீசர் பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

1. Executive Trainee (HR): 9 இடங்கள் (பொது-5, ஒபிசி-3, எஸ்டி-1). சம்பளம்: ₹60,000  – 1,80,000. தகுதி: Human Resources/Personnel Management/Industrial Relations/Social Work பாடத்தில் முதுநிலை பட்டம்/டிப்ளமோ.

2. Assistant Officer Trainee (PR): 6 இடங்கள் (பொது-3, ஒபிசி-1, எஸ்சி-2). தகுதி: இளநிலை பட்டம் பெற்று Mass Communications/Public Relations/Journalism பாடப்பிரிவில் முதுநிலை பட்டம்/டிப்ளமோ.

3. Assistant Officer Trainee (Rajbhasha): 6 இடங்கள் (பொது-3, ஒபிசி-2, எஸ்சி-1). இதில் ஒரு இடம் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தகுதி: இந்தி பாடப்பிரிவில் ஆங்கிலத்தை ஒரு பாடமாகக் கொண்டு முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது ஆங்கில பாடத்தில் இந்தியை ஒரு பாடமாகக் கொண்டு முதுநிலை பட்டம்.மேற்குறிப்பிட்ட பணிகளுக்கான சம்பளம்: ₹50,000 – 1,60,000.

4. Executive Trainee (Law): 4 இடங்கள் (பொது-2, எஸ்சி-1, எஸ்டி-1). தகுதி: 60% தேர்ச்சியுடன் மூன்றாண்டு முழு நேர எல்எல்பி அல்லது 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்பு. சம்பளம்: ₹60,000 – 1,80,000. பணிக்கு தேர்வாகும் பயிற்சியாளர்களுக்கு ஒரு வருட பயிற்சி வழங்கப்படும். பயிற்சியின் போது மாதம் ₹24,500 வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்: ரூ500/- ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி.,எஸ்டி., மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. www.posoco.in என்ற இணையதளம் மூலம் கூடுதல் விவரங்களை தெரிந்து கொண்டு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.9.2018.

DINASUVADU 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here