அய்யங்குளத்தில் அரோகரா கோஷத்தில் எழுந்தருளிய அருணாசலேஸ்வரர்…!

8

பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக உள்ளது திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்.இக்கோவிலில் கார்த்திகை மாதத்தில் தீபத்திருவிழா உள்பட பல்வேறு விழாக்கள் வெகுவிமர்சையாக நடக்கும் மேலும்  தீர்த்தவாரிகள் நிகழ்ச்சிகள் நடைபெறும்.அதன்படி தை அமாவாசை தினத்தில் திருவோணம் நட்சத்திர நாளில் அருணாசலேஸ்வரர் அய்யங்குளத்தில் எழுந்தருள்வார்.

தை அமாவாசை தினத்தில் இந்துக்கள் அனைவரும் இறந்த தங்கள் முன்னோர்களுக்கு நீர்நிலைகளில் புனித நீராடி தர்ப்பணம் செய்து  அவர்களை வழிபடுவர்.

Related image

இந்த ஆண்டு தை அமாவாசையானது சோமவாரமான திங்கட்கிழமையில் வந்தது மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. இது மஹோதய புண்ணியகாலம் என்றும் அழைக்கப்படுகிறது. இது போன்ற நிகழ்வு குறிப்பிட்ட ஒரு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே அமையுமாம். அப்போது தீர்த்தவாரிகள்  நடைபெறும்.

இதனை முன்னிட்டு நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வர் மற்றும்  உண்ணாமலை அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பின் சாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் புறப்படானது நடைபெற்றது.

Image result for அய்யங்குளத்தில்

பின் திருவண்ணாமலையில் உள்ள அய்யங்குளத்திற்கு எதிரே உள்ள மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதனை தொடர்ந்து அய்யங்குளத்தில் சிவாச்சாரியர்கள் மூலம் சாமி சூலத்திற்கு தீர்த்தவாரி நிகழ்ச்சியானது  நடந்தது. அப்போது சூலத்திற்கு பால், மஞ்சள், சந்தனம் உள்பட பல திரவியங்கள் மூலம் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனையானது காண்பிக்கப்பட்டது.

இதனை தரிசனம் செய்வதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு திரண்டு அவர்கள்  பரவசத்துடன் வழிபட்டனர்.மேலும் ஏராளமான போலீசார் இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து அய்யங்குளத்தில் ஏராளமான மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.