அமலாக்கத்துறையினர் அதிரடி ! நீரவ் மோடியின் 141 வங்கிக் கணக்குகளை முடக்க நடவடிக்கை…..

அமலாக்கத்துறையினர் வைர வியாபாரி நீரவ் மோடியின் 141 வங்கிக் கணக்குகளை முடக்க நடவடிக்கை , மேலும்  அவருடைய 145 கோடி ரூபாய் சொத்துகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட நீரவ் மோடி வெளிநாட்டுக்கு தப்பியோடி விட்டார். அவரது நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இம்மாதம் ஊதியம் வழங்கப்படாததுடன், வேறு வேலை தேடிக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதால் அவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 5 ஆயிரம் ஊழியர்களுக்கு பணிநீக்க நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது

இதனிடையே, நீரவ் மோடிக்கு சொந்தமான நிறுவனங்கள், உறவினர்கள் வீடுகள் உட்பட 17 இடங்களில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் ஏழாவது நாளாக நேற்றும் சோதனை மேற்கொண்டனர். நீரவ் மோடிக்கு சொந்தமான 141 வங்கிக் கணக்குகளை முடக்கி 145 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துகளை அவர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment