ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப்படை வீரர்களின் அதிரடி  தாக்குதலில், 72 தலீபான் பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர்.
ஆப்கானிஸ்தானின் கஜினி மாகாணத்தில் உள்ள நவா, கிலான் மற்றும் கோக்யானி மாவட்டங்களில் பதுங்கியுள்ள தலீபான் பயங்கரவாதிகளை குறிவைத்து உள்நாட்டுப்படைகளுடன் அமெரிக்க கூட்டுப்படைகள் இணைந்து  அதிரடி தாக்குதல்கள் நடத்தின.இந்த அதிரடி தாக்குலால் தலீபான் பயங்கரவாதிகள் நிலைகுலைந்து போனார்கள்.

இத்தாக்குதலில் நவா மாவட்டத்தில் 20 பயங்கரவாதிகளும் , கிலான் மாவட்டத்தில் 40 பயங்கரவாதிகளும் , கோக்யானி மாவட்டத்தில் பயங்கரவாதிகளும் என மொத்தம் 72 தலீபான் பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர். தலீபான் பயங்கரவாதிகளின் பயன்படுத்தி வந்த  3 கனரக வாகனங்கள், 5 மோட்டார் சைக்கிள்கள், ஏராளமான ஆயுதங்கள் அழிக்கப்பட்டு கைப்பற்றப்படடன.ஆனால் 72 தலீபான் பயங்கரவாதிகள் மரணம் அடைந்ததை மறுத்து  தலீபான் பயங்கரவாதிகள், 9 பேர் மட்டுமே பலியானதாக தெரிவித்துள்ளனர்.