அண்ணா பல்கலை முறைக்கேடு:வெறும் 5 மதிப்பெண் பெற்ற மாணவருக்கு மறுமதிப்பீட்டில் 77 மதிப்பெண்..!மேலும் 10000 மாணவர்களும் இதே முறை ..!லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி தகவல்

அண்ணா பல்கலை முறைக்கேடு:வெறும் 5 மதிப்பெண் பெற்ற மாணவருக்கு மறுமதிப்பீட்டில் 77 மதிப்பெண்..!மேலும் 10000 மாணவர்களும் இதே முறை ..!லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி தகவல்

77 மதிப்பெண்களை மறு மதிப்பீட்டில் விதிகளை மீறி மாணவர் ஒருவர்  பெற்றுள்ளார் என்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Image result for anna university
கடந்த  ஆகஸ்ட் 1 ஆம் தேதி  அண்ணா பல்கலைக்கழக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டாளர் உமா உட்பட 10பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.2017 ஏப்ரலில் நடைபெற்ற தேர்வில் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தோரிடம் லஞ்சம் பெற்றதாக வழக்கு தொடரப்பட்டது.
பின்னர் இவரிடம் நடத்திய விசாரணையில், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா, 2016 மே மாதம் முதல் 2018 ஏப்ரல் மாதம்வரை துணைவேந்தர் இல்லாத காரணத்தினால் அனைத்து பொறுப்புகளையும் கண்காணித்து வந்துள்ளார்.
Related image

ஒரு ஆண்டுக்கு ரூ.200 கோடிக்கு மேல் லஞ்சம் போலீஸ் பெறப்பட்டதாக விசாரணையில் அதிர்ச்சி தெரியவந்துள்ளது. மேலும் பலர் இதில் சிக்குவார்கள் என்றும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்தனர்.பின்னர்  திண்டிவனம் அரசு பொறியியல் கல்லூரி பொறுப்பு முதல்வர் விஜயகுமார் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
Image result for anna university exam hall
இந்நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அண்ணா பல்கலை. தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டு முறைகேடு தொடர்பாக  விசாரணை நடத்தினர்.
இதில் ஒரு மாணவர் கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்வில் மாணவர் ஒருவர் ஐந்து மதிப்பெண்கள் பெற்ற நிலையில் இரண்டுமுறை மறுமதிப்பீடு செய்ததுள்ளார்.இதன் மூலம் முதலாவது மதிப்பீட்டில் கூடுதலாக 40 மதிப்பெண்களும் ,இரண்டாவது மறுமதிப்பீட்டில் 32 மதிப்பெண்களும் சேர்த்து 77 மதிப்பெண்களை விதிகளை மீறி பெற்றுள்ளார் என்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.மேலும் 32 மதிப்பெண்களை பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. இதேபோன்று பத்தாயிரம் மாணவர்கள் வரை பயன்பெற்றிருக்கலாம் என போலீஸார் சந்தேகித்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *